[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கோவையை சேர்ந்த வினோத் அருணாசல விமான விபத்தில் பலி

iaf-confirms-no-survivors-in-an-32-crash

அருணாசலப் பிரதேசத்தில் நடந்த விமான விபத்தில் பலியான வீரர்களில் ஒருவர் கோவையில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.

இந்திய விமானப் படையின் விமானம் ஏஎன்-32 ஜூன் 3-ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மேசூகா பகுதிக்குப் புறப்பட்டது. இதனையடுத்து விமானம் மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் உள்ளிட்டவர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒருவார கால தேடுதலுக்குப் பிறகு அந்த விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் லிப்போ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஏஎன்-32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாகவும் இந்திய விமானப்படை அறிவித்தது. 

இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலை வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிகிறது. விமானம் விபத்திற்குள்ளான இடம் கரடுமுரடான இடம் என்பதாலும் மோசமான வானிலை நிலவுவதாலும் மற்றவர்களின் உடல்களை மீட்பதில் தாமதம் நிலவுகிறது. 

இதனிடையே இந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த விமானப் படை அதிகாரியான வினோத் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக விமானத்தின் கருப்பு பெட்டி நேற்று மீட்கப்பட்டது. இதனை ஆய்வு செய்யும்போது விபத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close