[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

நடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

chennai-high-court-condemn-to-police-department

நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், சாதாரண மக்கள் காணாமல் போன புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என கண்டனம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி தனது 19 வயது மகள் கவுசல்யா காணாமல் போனதாக திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தனது மகள் காணவில்லை, எங்கு சென்றார் என்ற தகவலும் இல்லை. இந்நிலையில் என் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மனுகுறிந்த விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நான்கு மாதத்திற்கு முன் புகார் அளித்தும் காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள்..? சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்குமா? என கேள்வி எழுப்பினார். மாதம் ஆனால் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் துறை உறவினர்கள், அல்லது அவர்கள் வீட்டில் இப்படி யாரேனும் காணாமல் போய் இருந்தால் இப்படித்தான் சாதாரணமாக எடுத்து கொள்வார்களா? என கேள்வி எழுப்பினார். நான்கு மாதங்களாக இளம் பெண்ணை மீட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் திரைப்பட நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை செயல்படுமா? என கேள்வி எழுப்பினர். மாதாமாதம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் உண்மையுடன் செயல்பட வேண்டும் எனவும் இல்லையென்றால் அதற்கான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த புகார் தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது...? விசாரனையின் தற்போதைய நிலைதொடர்பான விவரங்களை அறிக்கையாக வரும் திங்கட்கிழமை சமர்பிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close