[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

சைக்கோவாக மாறிய ஒருதலை காதலன் ! பொள்ளாச்சியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

pollachi-girl-murdered-in-love-issue

பொள்ளாச்சியில் மாணவி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாணவியின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்தும், விரல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் உள்ள ஏ நாகூர் பகுதியில் இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாணத்துடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டது, அது மாயமான ஒட்டன்சத்திரத்தை சேர்த்த கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்பேரில் சதீஷ் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

இதனிடையே சதீஷ், மாணவியின் தூரத்து உறவினர் என்பது தெரியவந்துள்ளது. மாணவி பள்ளி படிக்கும்போதே சதீஷ், மாணவியின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். அதற்கு ‘சுதா, பள்ளி தான் படிக்கிறார். இப்போது திருமணம் செய்துவைக்க முடியாது’ என பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனிடையே சதீஷ்க்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இருப்பினும் சுதாவை அடைவதில் சதீஷ் தீவிரமாக இருந்துள்ளார். திருமணம் ஆன பின்பும் கூட, சுதாவை பெண் கேட்டு மீண்டும் அவரின் வீட்டிற்கு சென்றள்ளார் சதீஷ். அப்போது, பெற்றோர்கள் வற்புறுத்தியதாலேயே இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறிய சதீஷ், சுதாவை திருமணம் செய்து வைக்குமாறு மீண்டும் பெற்றோர்களிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் இந்த முறையும் சுதாவின் பெற்றோர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். எப்படி திருமணம் ஆனவருக்கு மகளை கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

இதனிடையே சுதாவிற்கு, அவர் விரும்பிய இளைஞருடன் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் சுதா கல்லூரி விடுதியை விட்டு வழக்கம்போல வீட்டிற்கு செல்ல வந்த நிலையில் மாயமானதும், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. மாணவியின் உடலில் பல இடங்களில் அதாவது கழுத்து, நெத்தி, வயிறு உள்ளிட்ட இடங்களில் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதும், விரல்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் கொலையாளி கிட்டத்தட்ட சைக்கோ நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனிடையே மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருவாரம் கழித்த பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டே கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close