[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

“வெற்றி தோல்வியை சின்னம் நிர்ணயிப்பதில்லை” - திருமாவளவன்

symbol-not-decide-win-or-loss-thirumavalavan

தேர்தலில் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை சின்னம் நிர்ணயிப்பது இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆந்திராவிலும், கேரளாவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுகிறோம். தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். ஆந்திராவில் குண்டலூர், சித்தூர், விசாகப்பட்டினம், திருப்பதி, ராஜம்பித், கடப்பா ஆகிய 6 நாடாளுமன்ற தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. கேரளாவில் இடுக்கி, கோட்டயம், கொல்லம் ஆகிய 3 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். சிதம்பரத்தில் நான் தனிச் சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார். தனிச்சின்னத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு 1 மாத காலமாகியும், இதுவரை ஒதுக்க முன்வரவில்லை. 3 பட்டியல் கொடுத்தோம். தொடர்ந்து ஆணையம் காலம் தாழ்த்துகிறது. கட்சி நலன், கூட்டணி நலன் கருதி ஒரு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். இதனை ராஜந்தந்திரம் என்று தான் கூறவேண்டும். 

விழுப்புரம் தொகுதியும் விசிக வெற்றி பெற வேண்டிய நிலை பார்க்க வேண்டும். அதேசமயம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் விசிக வளர்ச்சி பாதிக்காது. விசிக-வுக்கு தனி வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும். அதற்கான பணிகள் எதிர்காலத்தில் நடக்கும்” என்று தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close