[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஜெயலலிதா சிகிச்சை - ஆணையம் விசாரணையை தொடரலாம்

the-madras-hc-has-postponed-the-arumugamasi-inquires-into-the-death-of-former-chief-minister-jayalalithaa-case-for-apollo-on-march-7

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்போலோ வழங்கிய சிகிச்சை குறித்து நீதிபதி ஆற்முகசாமி ஆணையம் விசாரிப்பதை எதிர்த்த வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். அதனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அமைத்தது. 

இதனையடுத்து ஜெயலிலதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடைப்பெற்று வருகிறது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணண், அப்போலோ மற்றும் அரசு மருத்துவர்கள் உள்பட ஏராளமானோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில் 21 துறைகளை சேர்ந்த மருத்துவர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும், அதுவரை, விசாரணை ஆணையம் முன் நேரில் ஆஜராக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோர் விலக்கு அளிக்கவேண்டும் என கோரப்பட்டது.

Related image

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா, ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் பதில் மனு, விளக்கமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்துவிட்டதாகவும், வாதங்களை தொடங்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கினை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் மூலம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடரலாம் என்ற உத்தரவு நீடிக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close