JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு 01 Jun, 2016 09:15 PM

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழல்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் ஜூன் முதல் வாரத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஜூன் முதல் வாரம் விவசாயத்திற்காக நீர் திறப்பது வழக்கம். பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டுமெனில் அணை நீர்மட்டம் குறைந்தபட்சம் 115 அடி இருக்க வேண்டும்.

ஆனால் கோடை மழை பொய்த்து போனதால் தற்போது அணை நீர் மட்டம் 111 அடிக்கும் குறைவாகவே உள்ளது. அணையில் இருந்து தமிழகத்துக்கு 104 அடிக்கும் மேல் உள்ள தண்ணீரை மட்டுமே எடுத்து செல்லும் நிலை உள்ளதால், ஐந்து அடி தண்ணீர் மட்டுமே எடுக்க முடியும். இந்த தண்ணீர் தேனி, மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே பயன்படும். இதனால் விவசாயத்துக்கு நீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழக பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசன நிலங்களில் முதல் மற்றும் இரண்டாம் போக சாகுபடி தள்ளி போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads