[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

திருப்பூர் வந்தார் பிரதமர் மோடி

pm-modi-arrives-tirupur

திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பூரில் இன்று நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உற்சாக வரவேற்பு அளித்தார். இதனையடுத்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அங்கு, அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி அதனையடுத்து பாரதிய ஜனதாவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இதனிடையே திருப்பூரில் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close