[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு 

mgr-102-birthday-celabration-in-chennai

எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாளையொட்டி, அவரின் உருவம் பொறித்த நாணயங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் விழா, தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். 

அப்போது எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதல்வரும், துணை முதல்வரும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதையடுத்து, அதிமுகவில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள புகார் குழுவின் செயல்பாட்டினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர், கிண்டியிலுள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை முதலமைச்சர் வெளியிட்டார். அதனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close