[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

எந்த அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்?

who-can-get-rs-1000-pongal-gift

பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், எந்தெந்த அட்டைதாரர்களுக்கு இந்தத் தடை பொருந்தும், எந்தக் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்ற விவரங்களை தெரிந்து கொள்வோம்.

PHH என்று அழைக்கப்படும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் அதாவது அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெறும் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு கிடைக்கும். தமிழகம் முழுவதும் இந்த அட்டை வைத்திருக்கும் 76 லட்சத்து 99 ஆயிரத்து 940 பேருக்கு 1000 ரூபாய் கிடைக்கும்.

இதேபோல 18 லட்சத்து 64 ஆயிரத்து 600 பேரிடம் இருக்கும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட, அதாவது 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்குவோருக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கிடைக்கும்.

அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வாங்கும் 90 லட்சத்து 8 ஆயிரத்து 842 அட்டைதாரர்களான முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளுக்கும் இந்த விதி பொருந்தும்.

பத்து லட்சத்து ஆயிரத்து 605 பேர் கொண்ட சர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படமாட்டாது. இதே போல எந்தப் பொருளும் இல்லாத 41,106 குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்காது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close