[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி பட்டப்பகலில் வழிப்பறி.. அதிரடி காட்டிய போலீஸ்..!

robbery-man-arrested-in-chennai

பட்டபகலில் அரசு பள்ளி ஆசிரியையை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலி பறித்த இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை தரமணி திருவள்ளுவர் நகரில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வேளச்சேரியை சேர்ந்த சித்ரா(35) என்ற அரசு பள்ளி ஆசிரியை பள்ளியில் இருந்து வீடு திரும்புவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது ஆசிரியையை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை கழட்டிக் கொடுக்கும் படியும் சத்தம்போட்டால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அரசு பள்ளி ஆசிரியை தங்கச் சங்கிலியைக் கழட்டிக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற ஆசிரியை இதுகுறித்து தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தரமணி போலீசார் கொள்ளையர் குறித்த விவரங்களை சேகரித்தனர். குற்றவாளியைப் பிடிக்க தரமணி குற்றப்பிரிவு ஆய்வாளர் கர்ணன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் ஆசிரியரிடம் கொள்ளையனை பற்றி விசாரித்ததில், அவர் கொடுத்த துல்லிய தகவலை வைத்தும் சிசிடிவியின் உதவியோடும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 60 மீட்டர் தொலைவில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இருசக்கர வாகனம் ஒன்று நம்பர் பிளேட் இல்லாமல் சென்றதை கண்ட போலீசாருக்கு சந்தேகம் எழவே அதற்கு சிறிது தூரம் இருக்கும் கேமராவையும் ஆய்வு செய்தனர். அதில் அதே இருசக்கர வாகனம் நம்பர் பிளேட்டுடன் இருந்தது போலீசாருக்கு கொள்ளையரை நெருங்க மிக எளிமையாக இருந்தது. வாகன பதிவெண்ணை கொண்டு வழிப்பறி கொள்ளையர்களின் விவரங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன்படி கல்லுக்குட்டையைச் சேர்ந்த டில்லிபாபு, மற்றும் சென்ஜோன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் தரமணி, திருவான்மியூர், துரைப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 20 சவரன் தங்க நகைகளை மீட்டனர். இருவர் மீதும் வழிப்பறி செய்வது, மிரட்டுவது, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

சிறப்பாக செயல்பட்டு வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்து 20 சவரன் தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசார், உதவி ஆய்வாளர்கள் வேணுகோபால், இளம்வழுதி, மகாராஜன், மற்றும் காவலர்கள் ராஜசேகர், செந்தில், ஆகியோரை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close