[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

பள்ளி மாணவி கர்ப்பம்.. பெற்றோருக்கே தெரியாத கொடுமை..!

school-student-pregnant-parents-shocked

நெல்லை மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது கர்ப்பத்தை பெற்றோரிடம் இருந்து மறைத்து குழந்தை பெற்றெடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி நேற்று முன்தினம் வயிறு வலியால் துடித்த நிலையில் பெற்றோர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி பிரசவ வலியால் துடிக்கிறார். உடனே பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவிக்கு சில மணி நேரத்தில் சுக பிரவசத்தில் ஆண்குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை இதுகுறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்ற கட்டிட தொழிலாளி 2 ஆண்டுகளாக தனது மகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகளின் இந்த நிலைமைக்கு காரணமான செல்வம் மீது தக்க நடவைக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.

புகாரினை பெற்று கொண்ட வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், செல்வம் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாகியுள்ள செல்வத்தை தேடி வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close