[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு

அடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்

chennai-met-announced-rain-will-fall-next-24-hours-in-tamil-nadu-and-puducherry

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை தொடர்பாக அறிவித்துள்ள சென்னை வானிலை மையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும் என்று கூறியுள்ளது. கன்னியாகுமரி‌ நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மலையோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, ஒடிசா கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிக்கு அக்டோபர்‌ 12ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தெற்கு மத்திய வங்க கடல், அந்தமான் கடல் பகுதிக்கு அக்டோபர் 9ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close