[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

போதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை 

the-court-has-ordered-the-clear-the-traffic-who-had-been-driving-in-alcohol

மதுபோதையில் வாகனம் ஓட்டியதுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்களுக்கு போக்குவரத்தை சீர்செய்ய சொல்லி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த வடவள்ளி கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்த சுதர்ஷன் என்ற இளைஞர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அப்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது காவலர்களிடம் சுதர்ஷன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தான் பெரிய ஆளு என்றும் முக்கிய பிரமுகர்களை தெரியும் என்றும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர்களை மிரட்டவும் செய்தார். இது தொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்கள் ரத்தினபுரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அவரை பிடித்து விசாரித்ததில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுதர்ஷன் என தெரிந்தது. உடனே அவரை கைது செய்தனர். 

இதனையடுத்து தான் செய்தது தவறு என்றும் காவலர்களின் பணி குறித்தும் அவர் வருத்தத்துடன் பேசிய வீடியோ, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஆகியவை சமூக வலைத்தளங்களில் பரவியது. தொடர்ந்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், விபத்து ஏற்படுத்தும் விதமாகவும், குடிபோதையில் வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் கடந்த 16 ஆம் தேதி சுதர்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலருக்கு உதவியாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஈடுபடவும் நூதன முறையில் நீதிமன்றம் நிபந்தனை அளித்ததை அடுத்து, தனது பணியை சுதர்சன் துவக்கியுள்ளார். நீதிமன்றம் இதுபோன்று நிபந்தனை வழங்கியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close