[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

மதுபோதையில் குழந்தையை துன்புறுத்திய தந்தை ?

drunked-father-hit-his-child

மதுரையில் மதுபோதையில் பெற்ற தந்தையே தனது 4 வயது பெண் குழந்தையை கடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. 

மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர்கள் சசி - கௌரி தம்பதி. மேடை நடனக் கலைஞர்களான இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவரும் பணிக்குச் செல்லும் போது குழந்தையை வீட்டில் தனியாக விட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தையை கவனித்துக் கொள்வார்கள். இந்நிலையில் மதுபோதையில் தனது 4 வயது மகளை தந்தை சசி அடித்தும், கடித்தும், சூடுவைத்தும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இன்று வழக்கம் போல் குழந்தையை தனியாக விட்டுவிட்டு பெற்றோர் வெளியே சென்றுவிட்டனர். 

அதன்பிறகு குழந்தையை அக்கம்பக்கத்தினர் கவனித்த போது அதன் உடலில் வழக்கத்தை விட அதிக காயம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாதர் சங்கத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல்துறையினர் குழந்தையிடம் விசாரித்தனர். அதன் உடலில் காயங்கள் இருந்ததை அடுத்து குழந்தை, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close