[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

நீட் தேர்வால் வீட்டைவிட்டு வெளியேறிய இளம்பெண்?

neet-exam-a-young-woman-who-left-her-home

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைத்த விரக்தியில், சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி வீட்டை விட்டு சென்றுவிட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் நம்மாழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமர். அவருடைய மகள் கோட்டீஸ்வரி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். கடந்த முறை நீட் தேர்வு எழுதிய அவர், குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்‌ளார். அதனால், வீட்டில் கடுமையான பயிற்சி எடுத்து, இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதினார். கடந்த 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவை பார்க்க செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். மீண்டும் குறைந்த மதிப்பெண்களே கிடைத்ததால் விரக்தியடைந்த கோட்டீஸ்வரி, பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, சென்ட்ரலில் இருந்து ரயில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது. மீண்டும் போன் செய்து பார்த்த போது ரயிலில் செல்வதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். 

பின் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் கடந்த நீட் தேர்வை விட குறைவாக மதிப்பெண் எடுத்ததால், மருத்துவராக முடியவில்லை என மகள் வீட்டை விட்டு விரகதியில் சென்றுள்ளதாக பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இதனையெடுத்து போலீசார் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து பார்த்த போது, நெல்லூரில் கடைசியாக சிக்னல் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கடைசியாக் கோட்டீஸ்வரி தொடர்பு கொண்ட எண்களை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் கோட்டீஸ்வரி மாயமானதுக்கு வேறெதும் காரணமா என்ற அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close