[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

சென்னையில் மழை: மக்கள் மகிழ்ச்சி

rain-in-chennai-today

சென்னையில் மிக முக்கியமான பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும்  உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதற்கிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக குளச்சலில் இருந்து கீழக்கரையை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 3 மீட்டருக்கும் மேலாக அலைகள் உயரும் என்றும் நாளை இரவு வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், தென் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் கூறியது.

 கடந்த 24 மணிநேரத்தில் குளச்சல், தக்கலை ஆகிய இடங்களில் 7 சென்டிமீட்டரும், காஞ்சிபுரத்தில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. ஓமலூர், ஆலங்காயம், போளூர் ஆகிய இடங்களில் 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது.

இந்நிலையில் சென்னையில் கோயம்பேடு, சூளைமேடு, கேகேநகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஒரு மாதங்களுக்கு மேலாக நிலவிய வெப்பம் லேசாக குளிரத் தொடங்கியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : ChennaiRainTodayமழைசென்னை
Advertisement:
Advertisement:
[X] Close