[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

உலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் முன்னேற்பாடுகள் தீவிரம்

thiruvarur-car-festival

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்தத் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள தேர்தான், ஆழித்தேர்களில் முதன்மையானது. ஆசியாவிலேயே மிகப்பெரியதான இந்த ஆழித்தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்டது. இந்தத் தேரை நகர்த்துவதற்கே 5 ஆயிரம் பேர் தேவை. அப்படிப்பட்ட பிரமாண்டமான தேர் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. ஆழித்தேரோட்டத்திற்காக தேர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேரில் அமைக்கப்படும் நான்கு குதிரை சிலைகளே பிரம்மாண்டமானதாக இருக்கும். தேர் வீதி உலா வரும்போது குதிரைகள் அசைந்தாட, கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்கிறார்கள் திருவாரூர் மக்கள். உலகப்பிரசித்திப் பெற்ற ஆழித்தேரோட்ட கொண்டாட்டத்திற்காக தற்போதே திருவாரூர் தயாராகி வருகிறது.

தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதை ஆய்வு செய்த ஆட்சியர் நிர்மல்ராஜ், உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close