[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!

chennai-people-expect-with-happy-for-rain-chennai-met-center

சென்னையின் ஒருசில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டம் துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

அதே போல தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.‌ அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மழை பெய்யும் என்ற தகவல், வெயிலில் சிரமப்பட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close