[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

நடுக்கடலில் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

fishermen-shake-in-the-middle-of-the-sea-sri-lanka-naval-infiltration

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொ‌ண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதுடன், அவர்களிடமிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். 

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று‌ 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்களை கச்சத்தீவு அருகே கூட நெருங்கவிடாமல், இலங்கை கடற்படையினர் நேற்று இரவு விரட்டியடித்தனர். 50க்கும் அதிகமான படகுகளில், இருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். மேலும் இன்று அதிகாலை 3 மணி அளவில், 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை தனுஷ்கோடி - மன்னார் இடையே வழிமறித்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, விரட்டியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையின் அத்துமீறல் தடுத்து‌ நிறுத்தப்பட வேண்டும் என கரைதிரும்பிய மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close