[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

44 விவசாயிகள் எரித்துக்கொல்லப்பட்ட கீழவெண்மணி சம்பவம்...! 48-வது துக்க தினம் அனுசரிப்பு

48th-day-of-mourning-for-farmers-death

நாகை மாவட்டம் கீழ வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அங்குள்ள நினைவிடத்தில் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

நாகை மாவட்டம் கீழ வெண்மணி கிராமத்தில், கடந்த 1968-ஆம் ஆண்டு இதேநாளில்தான், விவசாயக் கூலியை உயர்த்தி தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 44 பேரும், ஒரு குடிசையில் அடைத்து வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொடூரச் சம்பவத்தின் நினைவாக கீழ வெண்மணியில், தியாகிகள் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துக்கத் தினத்தின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் தியாகிகள் நினைவுத் தூணில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close