[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

சோ ராமசாமி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

modi-mourning-to-cho-ramaswamy

துக்ளக் இதழின் ஆசிரியரும், நடிகருமான சோ ராமசாமி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். சோ-வின் மறைவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர், கதாசிரியர், பத்திரிகையாளர், அரசியல் நையாண்டி, வழக்கறிஞர் என பன்முக திறன் கொண்ட சோ ராமசாமி மறைவிற்கு பல நடிகர்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, சோ மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், மரியாதைக்குரிய சோ ராமசாமி மிகவும் போற்றக்கூடிய அறிவார்ந்த, தேசியவாதி எனவும் அச்சமின்றி பேசக்கூடியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். பன்முகத் தன்மை கொண்ட சோ எல்லாவற்றிற்கும் மேலாக தன் நண்பன் என கூறியுள்ள பிரதமர் மோடி, சோ-வின் இறப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் துக்ளக் இதழலின் எண்ணற்ற வாசகர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close