[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

நாடா புயல் எச்சரிக்கை.. பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

cyclone-nada-alert-for-tamil-nadu-holiday-in-many-schools

நாடா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடா புயல் எச்சரிக்கையை அடுத்து, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் ஆகிய தாலுக்காக்களுக்கு மட்டும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது. கடலூர் மாவட்டத்தில், பள்ளிகளோடு சேர்த்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close