[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரித்தார் அன்பழகன்

anbazhagan-meets-dmk-leader-karunanidhi

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி ஒருமாத காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, திமுக தலைமைக் கழகம் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் திமுக தலைவர் கருணாநிதி ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள் நேரில் காண வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, பொருளாளர் மு.க.ஸ்டாலினும் உடன் இருந்தார். இந்த புகைப்படம் கருணாநிதியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close