[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

விமான நிலையம் வரை மெட்ரோ சேவை: அதிக வரவேற்பு இல்லை

chennai-metro-rail-facility

சென்னை மெட்ரோ ரயில்சேவை விமான நிலையம் வரை நீட்டிக்கப்பட்டும் பாதையில் அதிக வரவேற்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின் படி மெட்ரோ ரயில் நிறுத்தங்களில் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம், ஆலந்தூர் நிறுத்தம் ஆகியவற்றை‌யே அதிகம் பேர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. கடந்த செம்டம்பர் மாதத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேரும், ஆலந்தூர் நிறுத்தத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேரும் பயணித்துள்ளனர்.

அதே நேரத்தில் சென்னை விமானநிலைய நிறுத்தத்தை சுமார் 46 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். விமானநிலைய நிறுத்தம் சமீபத்தில்தான் திறக்கப்ப‌ட்டிருப்பதால், போகப்போக பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் கருதுகின்றனர். ஆலந்தூர், கோயம்பேட்டை தொடர்ந்து வடபழனி, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் ஆகிய நிறுத்தங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. மின்தூக்கிகள் இல்லாததால் மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை சந்திப்பு ஆகியவை அதிக பயன்பாடு இல்லாமல் இருக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close