[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

தமிழக மீனவர்கள் மீது இனி தாக்குதல் இல்லை.... இலங்கை உறுதி

there-is-no-attack-on-indian-fishermen-sri-lanka

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என இலங்கை அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்திய, இலங்கை மீனவர்கள் இடையே நீண்ட காலமாக பிரச்னை நடைபெற்று வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை சிறைப்பிடிப்பது, மீன்பிடி வலைகளை அறுப்பது உள்ளிட்ட செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் எங்களுக்கு மீன் கிடைப்பது இல்லை எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என இலங்கை மீனவர்கள் தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. காலம்காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் முயற்சியாக இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா- இலங்கை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி டெல்லி ஜவகர் பவனில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. நான்கு கட்டங்களாக நடந்த அக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் இருந்து 10 மீனவ அமைப்புகளும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இருந்து 4 அமைப்புகளும் கலந்து கொண்டனர். இலங்கை சார்பில் யாழ்ப்பாணம், மன்னார், முள்ளிவாய்க்கால், வன்னி பகுதிகளை சேர்ந்த மீனவ அமைப்புகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம், கச்சதீவு பிரச்சனை, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டள்ள படகுகளை மீட்பது போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. முக்கியமாக இதில் தமிழக மீனவர்கள் தரப்பில் இலங்கை பறிமுதல் செய்துள்ள 115 படகுகளையும், 9 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், 83 நாட்கள் கடலில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் நவம்பர் 5 ஆம் தேதி நடக்கும் இரு நாட்டு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முன்வைக்கப்படும் என தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து, இறுதி கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இன்று நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இலங்கை சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா, மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமர வீரா ஆகியோ கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். தமிழகத்தின் சீரழிவுகளுக்கு திமுகவும் காங்கிரசும் தான் என்றார். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை வசம் உள்ள 115 படகுகளை விடுவிகவும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பின்னர் பேசிய இலங்கை அமைச்சர்கள் ‘எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது. அதேபோல், மீனவர்கள் எல்லைத் தாண்டும்போது உயிர்ச்சேதம் ஏற்படாது’ என்று உறுதி அளித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close