[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு.... வானிலை ஆய்வு மையம்

chance-of-rain-at-tamilnadu

தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மத்திய மேற்கு வங்கக் கடலில் நீடித்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. எனினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்,சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகி இருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் சராசரியை விட 5 % குறைவாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close