[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்

joe-root-makes-breakthrough-but-bj-watling-steady-for-nz

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி வருகிறது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயி-யில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி, 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ், 91 ரன்கள் எடுத்தார். 

நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி (Tim Southee) 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. நிதானமான ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ் டெய்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த வால்டிங்கும் கிராண்ட் ஹோம் தலா அரைசதம் எடுத்து ஆடி வருகின்றனர். மூன்றாம் நாள் குளிர்பான இடைவேளைவரை அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. வால்டிங் 55 ரன்களுடனும் கிராண்ட் ஹோம் 59 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close