[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

அரை இறுதியில் எந்த அணியுடன் இந்தியா மோதும்?

world-cup-2019-which-team-will-india-face-in-semi-final

உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில், இந்திய அணி எந்த அணியுடன் மோதும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் முடிவடைகின்றன. அடுத்து அரையிறுதி போட்டி கள் நடக்க இருக்கின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இதில் முதல் மூன்று இடங்களை, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பிடித்துவிட்டன. நான்காவது அணி எது என்பது இன்று தெரிந்துவிடும். அது நியூசிலாந்து அணியாகத்தான் இருக்கும். 

 

இந்நிலையில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி, நான்காவது இடத்தில் உள்ள அணியுடனும், 2-வது இடத் தில் உள்ள அணி, 3-வது இடத்தில் இருக்கும் அணியுடனும் அரைஇறுதியில் மோத வேண்டும். இந்திய அணி, 13 புள்ளிகளு டன் 2-வது இடத்தில் இப்போது இருக்கிறது. இந்திய அணி, கடைசி லீக்கில் இலங்கை அணியுடன் நாளை மோதுகிறது. இதே போல 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, தனது கடைசி லீக்கில் தென்னாப்பிரிக்காவுடன் நாளை மோதுகிறது. இந்த இரு போட்டிகளை பொறுத்தே டாப்-2 இடங்கள் முடிவாகும்.

இந்திய அணி, தனது கடைசி லீக்கில் இலங்கையுடன் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவிடம் தோற் றால், இந்தியா 15 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறும். இப்படி நடந்தால், இந்திய அணி அரைஇறுதியில், தற்போது 4-வது இடம் வாய்ப்பில் இருக்கும் நியூசிலாந்துடன் மோதலாம். ஆஸ்திரேலியா, மூன்றாவது இடம் வகிக்கும் இங்கிலாந்துடன் மோதும்.

இந்திய அணி, இலங்கையிடம் தோற்றால், 2-வது இடத்திலேயே நீடிக்கும். அப்போது 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்துடன்  மோத வேண்டி வரும். இதற்குத்தான் அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. நடப்பு தொடரில், இந்திய அணி லீக் சுற்றில், இங்கிலாந்திடம் மட்டுமே தோற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close