[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

பஞ்சாப் அணி 166 ரன்கள் குவிப்பு - இலக்கை எட்டுமா டெல்லி ?

punjab-vs-delhi-13th-match-167-runs-target-for-dc

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 166 ரன்கள் குவித்துள்ளது.

2019 ஐபிஎல் தொடரின் 13வது போட்டி இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் பஞ்சாப் அணி முதல் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் சாம் குரான் ஆகியோர் 15 (11) மற்றும் 20 (10) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.

அவர்களை தொடர்ந்து வந்த மயாங் அகவர்வால் நீண்ட நேரமாக களத்தில் நின்றும் 6 (9) ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். பின்னர் ஜோடி சேர்ந்த சர்ஃபராஸ் கான் மற்றும் டேவிட் மில்லர் அணியின் ரன்களை உயர்த்தினர். 39 (29) ரன்கள் எடுத்த நிலையில் கான் அவுட் ஆகினார். பின்னர் மில்லரும் 43 (30) ரன்களில் நடையை கட்டினார். அவர்களுக்கு பின்னர் வந்தவர்களில் மந்தீப் சிங் 29 (21) ரன்கள் எடுக்க, மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் 166 ரன்கள் குவித்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close