[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: சதத்தை நோக்கி பிருத்வி ஷா!

prithvi-shaw-aggressive-fifty-on-debut

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளை வரை, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக பிராத்வொயிட் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கே.எல்.ராகுலும் அறிமுக வீரர் பிருத்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

Read Also -> முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் !  

Read Also -> ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு போறீங்களா ? கொஞ்சம் உஷாரா இருங்க

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் எல்பிடபிள்யூ ஆனார். அவர் ரன் கணக் கைத் தொடங்கும் முன்பே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து பிருத்வியுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் வந்த பந்துகளை அடித்து ஆடி வருகின்றனர். 19.5 ஓவர்களில் இந்திய அணி நூறு ரன்களை கடந்தது. பிருத்வி ஷா, ஒரு நாள் போட்டிகளில் ஆடுவது போல அதிரடியாக ஆடி வருகிறார். அவர் தனது 56 வது பந்தில் அரை சதத்தைக் கடந்தார். 

உணவு இடைவேளை வரை, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. பிருத்வி ஷா, 74 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களுடன் சதத்தை நோக்கி ஆடிவருகிறார். புஜாரா 74 பந்துகளில் 56 ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close