[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!

asia-cup-2018-to-kick-start-today

ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று மாலை தொடங்குகிறது.

14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பைனலில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான். அந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் மோதுகின்றன. இதனால் ஆசிய கோப்பை போட்டி எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. தனது முதல் லீக்கில் ஹாங்காங்குடன் வரும் 18 ஆம் தேதி மோதும் இந்திய அணி, மறுநாளே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள தால் ரோகித் சர்மா தலைமையில் அணி களமிறங்குகிறது. தவான், கே.எல்.ராகுல், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, தோனி, புவேனே ஷ்வர் குமார், பும்ரா, சேஹல், குல்தீப் என இந்திய அணியின் கலவை அருமையாக இருக்கிறது.

தொடக்க நாளான இன்று முதல் லீக்கில் இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இலங்கை அணியில் காயம் காரணமாக சண்டி மால் விலகியுள்ளார். அணியில் இடம் கிடைக்காமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா இந்த தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இந்த தொடரில் தனது திறமையை நிரூபிப்பார் என்று தெரிகிறது.

அனைத்து ஆட்டங்களும் பகல்–இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. துபாயில் கடும் வெயில் வாட்டுவதால், அதை சமாளிக்க வீரர்கள் கடுமை யாக போராட வேண்டியிருக்கும்.  இங்குள்ள ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close