[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: பாக். கேப்டன்

every-match-against-india-is-important-sarfraz-ahmed

இந்திய அணியுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது சொன்னார்.

14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 15 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பைனலில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான். அந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த தொடரில் மோதுகின்றன. இதனால் ஆசிய கோப்பை போட்டி எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

Read Also -> இங்கிலாந்தில் அரை சதம் போட்ட முரளி விஜய்!


இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறும்போது, ‘சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது நடந்து முடிந்த கதை. அது முடிந்து ஒன்றரை வருடங்களாகிவிட்டது. அதனால் அந்த போட்டியுடன் இதை தொடர்புபடுத்த விரும்பவில்லை. அடுத்து நடக்கும் போட்டியை மட்டுமே கவனத்தில் வைத்திருக்கிறோம். இந்தியாவுடன் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதுதான். இந்த தொடரில் பங்கேறும் ஆறு அணிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சீதோஷண் நிலை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் சொந்த ஊரில் விளையாடுவது போன்றே இங்கும் விளையாட முடியும். வெளிச்சத்துக்கு கீழ் விளையாடுவது கடினம் என்று சோயிப் மாலிக் கூறியிருப்பது பற்றி கேட்கிறார்கள். இங்கு சூடான சீதோஷ்ணநிலை இருக்கும். கஷ்டம்தான். இருந்தாலும் சிறப்பாக விளையாட முடியும். முதலில் பேட்டிங் செய்தால் இங்கு நாங்கள் 300 ரன்களுக்கு மேன் எடுப்போம். 

Read Also -> கோலி அந்த விஷயத்தில் ரொம்ப 'வொர்ஸ்ட்' 

போட்டிக்கு அணியின் உத்வேகம் முக்கியம். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதே உத்வேகத்துடன் தொடர் முழுவதும் ஆடினோம். அதை தென்னாப்பிரிக்கா, இலங்கைக்கு எதிராக தொடரில் கையாண்டோம். அந்த உத்வேகம் இந்த தொடரிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவோம். அணியில் சில வீரர்கள் சேர்த்துக்கொள்ளப்படாதது பற்றி கேட்கிறார்கள். அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்படுபவர்கள்தான். உலகக்கோப்பை வரை இன்னும் அதிகமான கிரிக்கெட் காத்திருக்கிறது. அந்த தொடர்களில் அவர்களுக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close