[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

வாழ்வா - சாவா? ஆட்டத்தில் பெங்களூரு அணி

ipl-2016-royal-challengers-bangalore-rcb-vs-gujarat-lions

ஐபிஎல் கிரிக்கெட் தொ‌டரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

பெங்களூருவில் மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன. 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி, ஏழில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடி, நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க இனிவரும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

ஈடன் கார்டனில் ‌இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் புனே அணிகள் விளையாடவுள்ளன. 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள புனே அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close