[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

அப்பாடா, ’யோ- யோ’வில் தேர்வு பெற்றார் ’சிஎஸ்கே’ ராயுடு: ஆசிய கோப்பையில் வாய்ப்பு!

rayudu-cleared-the-yo-yo-test

ஒரு வழியாக யோ யோ டெஸ்ட்டில் அம்பத்தி ராயுடு தேர்வு பெற்றுள்ளார். இதையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது. 

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. 32 வயதான இவர், கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய ஒரு நாள் அணியில் கடைசியாக 2016-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தார். பிறகு இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயுடு, கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடிய ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கியமானவராக இருந் தார். அவரது அதிரடியான பேட்டிங், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மொத்தம் 602 ரன்கள் குவித்தார் இந்த ’சிஎஸ்கே’ ராயுடு. ஸ்டிரைக் ரேட் 149.75 ஆக இருந்தது.

இதையடுத்து இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. அதே போல ஒரு நாள் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த தொடரில் விளையாடும் வீரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக் கெட் அகாடமியில் நடந்தது.

 இதில் அம்பத்தி ராயுடு தேர்வு பெறவில்லை. ’யோ யோ’வின் குறைந்தப்பட்ச தகுதி ஸ்கோர் 16.1 ஆகும். இதில் ராயுடு தோல்வி அடைந்தார் . 

இரண்டு வருடங்களுக்கு பிறகு அணியில் வாய்ப்புக் கிடைத்தும் யோ யோ டெஸ்ட், அந்த வாய்ப்பை ராயுடுவிடம் இருந்து பறித்துவிட்டது. சிறப்பான ஃபார்மில் இருந்தும் ராயுடுவுக்கு அணியில் இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித் தனர்.

இந்நிலையில் இந்திய ஏ, இந்திய பி, இந்திய ரெட், கிரீன், புளு அணிகளுக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் எதிலும் அம்பத்தி ராயுடு பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் யோ யோ டெஸ்டில் தேர்வு பெற்றார். இதையடுத்து இந்திய ஏ அணியில் அவர் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவினார். 

பின்னர் பேசிய ராயுடு, ’யோ யோ டெஸ்ட்டில் தேர்வு பெறாதது எனக்கு ஏமாற்றத்தை தந்தது. அந்த உடல் தகுதி தேர்வு முறை குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என்பது சரியானதுதான். ஆனால் நான் என்னையே ஏமாற்றிக் கொண்டேன். சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு சில பிட்னஸ் கோல்கள் தேவைதான். கடந்த சில நாட்களுக்கு முன், யோ யோ டெஸ்ட்டில் தேர்வு பெற்றேன். இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறேன். தேசிய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். நாட்டுக்காக விளையாடுவது என்பது எப்போதுமே பெருமையான விஷயம்தான்’ என்றார்.

அடுத்த மாதம், நடக்க இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு சேர்த்துக்கொள்ளப்படுவார் எனத் தெரிகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close