[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

ஐபிஎல் நட்பை எல்லாம் மறந்தாச்சு: பட்லர் பளிச் !

ipl-friendships-will-be-forgotten-says-jos-buttler

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் இந்தப் போட்டி பற்றி கூறும்போது, ’ஐபிஎல் போட்டியின் போது இந்திய வீரர்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பை இப்போது மறந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார். பட்லர் 2017 ஆம் ஆண்டு மும்பை இண்டியன்ஸ் அணிக்காகவும் இந்தாண்டு ராஜஸ்தான் அணிக்காகவும் ஆடியவர். மோசமான ஃபார்மில் இருந்த அவர், ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம் பிடித்தார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் மேலும் கூறும்போது, ’பொதுவாக அவர்களுடன் நட்பாகத்தான் இருக்கிறேன். ஆனால் மைதானத்துக்குள் அதை மறந்து ஒவ்வொருவரையும் போட்டியாளராகத்தான் பார்ப்போம். மொயின் அலி, விராத் கோலியின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விளையாடினார். சேஹல் அந்த அணியில் இருந்தார். ஹர்திக் பாண்டியாவுடன் மும்பை அணியில் இருந்தபோது விளையாடி இருக்கிறேன். ரஹானே உள்ளிட்ட வீரர்களுடன் நன்றாக பழகி இருக்கிறேன். ஆனால், ஆடுகளத்தில் நட்புக்கு இடமில்லை. போட்டியை வெல்வதில்தான் குறியாக இருப்போம். 

ஐபிஎல் தொடரில் நான் கற்றுக்கொண்ட விஷயம், முன்னணி வீரர்கள் ஏன், சிறந்த வீரர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தான். அவர்களுக்கு ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கை இருக்கும். விராத் கோலி போன்ற வீரர்களின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். அவர் திறமையான வீரர். பதட்டமான சூழலிலும் வெற்றியை நோக்கி போட்டியை கொண்டு செல்பவர். அவரது பேட்டிங் திறமை எனக்கு பிடிக்கும். இந்திய அணியுடன் எனக்கு நல்ல நினைவுகள் இருக்கிறது’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close