[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

சேவாக் அப்போ கூச்ச சுபாவம் கொண்டவர்: சச்சின் தகவல்!

sachin-tendulkar-reveals-how-he-broke-the-ice-with-shy-virender-sehwag

 

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காராக வலம் வந்தவர் ஷேவாக். டி20 கிரிக்கெட் இல்லாத காலகட்டத்திலேயே அதிரடியாக வெளுத்து கட்டியவர். ஷேவாக் - சச்சின் டெண்டுல்கர் இணை இந்திய அணியின் மிகச்சிறந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கடவுள் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை இந்த இணை ஒரு கை பார்த்துள்ளது. யுடியூப் வெப் சீரியஸான ‘ வாட்ச் தி டக்’ என்ற நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் இருவரும் கலந்து கொண்டு தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர். 

இந்த தொடரில் இருவரும் பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் சேவாக் குறித்து சச்சின் பேசியது ஆச்சரியமாக இருந்தது. நம் அனைவருக்கும் சேவாக்கை ஒரு அதிரடி ஆட்டக்காரராக தெரியும். ஆனால் சேவாக் முதன் முதலில் இந்திய அணியில் இடம்பிடித்த காலத்தில் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்ததாக சச்சின் கூறினார். 

சச்சின் பேசுகையில்,  ’வீரு இந்திய அணியில் இணைந்த காலகட்டத்தில் என்னுடன் பேசமாட்டார். இது சரிபட்டு வராது என எனக்கு தோன்றியது. ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடவுள்ளோம். நாங்கள் இருவரும் நன்றாக பேசி பழகினால் தான் களத்தில் சிறப்பாக செயல்பட வசதியாக இருக்கும். எனவே நான் அவரிடம் சாப்பிட போலாமா என அழைத்தேன். கிளம்புவதற்கு முன் உங்களுக்கு என்ன பிடிக்கும் என கேட்டேன். அதற்கு அவர் நான் சைவம் என்று பதிலளித்தார். ஏன் சைவம் சாப்பிடுறீங்க கேட்டேன். அதுக்கு வீரு, சிக்கன் சாப்பிட்டால் வெயிட் போட்டும்னு வீட்ல சொன்னாங்க என்றார். என்னை பாரு நான் என்ன உன்ன விட குண்டாவா இருக்கேன்? நான் வருடம் முழுவதும் சிக்கன் சாப்டுறேன். வா ட்ரை பண்ணி பாரு என்றேன். இப்ப வீரு சிக்கனை வெளுத்து வாங்குறார்’ என சச்சின் கூறினார்.

சேவாக் பேசுகையில் ’நான் இந்திய அணியில் இடம்பிடித்த சமயத்தில் கூச்ச சுபாவம் கொண்டவனாக இருந்தேன்.  நான் முதன்முறையாக சச்சினை சந்தித்த போது அவர் கைக்குலுக்கி விட்டு சென்று விட்டார். நான் கிரிக்கெட்டுக்கு வந்ததற்கு காரணமே சச்சின் தான். அவரிடமே நாம் கைகுலுக்கி விட்டோம் என நினைத்துக்கொண்டேன். இந்திய அணியில் நான் சீனியர் வீரராக மாறியபோது சச்சின் என்னிடம் நடந்துக்கொண்டது போல் நடந்துக்கொண்டேன். ஒருவரை பற்றி தெரியாமல் அவர்களிடம் நெருக்கமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன்’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close