[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

ஐபிஎல் கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 5-வது தோல்வி

ipl-cricket-mumbai-beat-kings-x1-punjab

ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 81 ரன்களும், ராயுடு 65 ரன்களும் விளாசினர். ஜோ பட்லர் 24 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணியில் முரளி விஜய் 19 ரன்களிலும், மனன் வோரா 7 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஷான் மார்ஷுடன் இணைந்து மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். 33 பந்துகளில் அரை சதம் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த நாயக் 1 ரன்னிலும், அக்ஷர் படேல் ரன் ஏதுமின்றியும் ஆட்டடமிழக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது பஞ்சாப். இதன் மூலம் மும்பை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது மும்பைக்கு 3-வது வெற்றியாகும். அதேநேரத்தில் பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வியாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close