[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

ரசிகர்களுக்கு விருந்து படைத்த விராட் கோலி

india-vs-south-africa-2018-3rd-odi-virat-kohli-160-propels-india-to-303-6

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 303 ரன்கள் குவித்துள்ளது.

கேப்டவுனில் நடைபெறும் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா முதல் ஓவரிலே டக் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலியும், ஷிகார் தவானும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடி பதற்றமே இல்லாமல் ரன்களை சேர்த்தது. 

ஷிகார் தவான் 76 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ரகானே 11, பாண்ட்யா 14, தோனி 10, கேதர் ஜாதவ் 1 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்பாக விளையாடிய கேப்டன் கோலி தனது 34வது சதத்தை பதிவு செய்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கோலி மட்டும் தனியாக போராடி ரன்களை சேர்த்தார். 236 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. பின்னர் களமிறங்கிய புவனேஷ்வர்குமார், கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். விக்கெட் விளாமல் பார்த்துக் கொண்டார். இதனால், விராட் கோலி ரன்களை சேர்த்துக் கொண்டே சென்றார். தென்னாப்பிரிக்கா வீரர்களால் கோலியை இறுதி வரை ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை. 

விராட் கோலி ஆட்டமிழந்திருந்தால் இந்திய அணி 250 ரன்களுக்குள் சுருண்டு இருக்கும். கோலி இறுதி வரை சிறப்பாக விளையாடி 159 பந்துகளில் 160 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். புவனேஷ்குமார் 19 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது.

          

23.1 ஓவரில் ஷிகர் தவான் ஆட்டமிழந்த போது இந்திய அணி 140 ரன்கள் எடுத்து இருந்தது. அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் விராட் கோலி தனி ஆளாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close