[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்

தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்: அஸ்வின் அசத்தல்

india-vs-south-africa-2nd-test-day-1-highlights-r-ashwin-sa-run-into-trouble

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய எல்கர், மர்கரம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தனர். எல்கர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்கரம் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆம்லா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த டிவில்லியர்ஸ்(20), டிகாக்(0), பிலந்தார்(0) ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார். சற்று நிலைத்து ஆடிய ஆம்லா 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

         

முதல் நாள் ஆட்டம் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது.  டுபிளிசிஸ்(24), மகராஜ்(10) ரன்களில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். அஸ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பாண்ட்யா அற்புதமாக பீல்டிங் செய்து இரண்டு ரன் அவுட்களை செய்தார். நாளை தொடர்ந்து விளையாடி தென்னாப்பிரிக்கா 350 ரன்கள் குவித்தால் இந்திய அணிக்கு நெருக்கடியாக அமையும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close