[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
விளையாட்டு 08 Jan, 2018 09:42 AM

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

rampant-australia-seal-ashes-4-0-with-root-crocked

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஏற்கனவே மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்துக்கொண்டது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடந்து வந்தது.

 முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 346 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கவாஜா 171 ரன்களும் ஷான் மார்ஷ் 156 ரன்களும் மிட்செல் மார்ஷ் 101 ரன்களும் எடுத்தனர். 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரூட் 42 ரன்களுடனும் பேர்ஸ்டோவ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 

ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரூட் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். பேர்ஸ்டோவ் 38 ரன்களிலும் மொயின் அலி 13 ரன்களிலும் அவுட் ஆகினர். குர்ரன் 23 ரன்களுடன் போராடிக்கொண்டிருக்க, அடுத்த வந்தவர்கள் நிலைத்து நிற்காததால் இங்கிலாந்து அணி, 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸ் மற்றும் 123 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் லியான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது கம்மின்ஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close