[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

தொடக்க ஆட்டக்காரராக 4 பேர்: என்ன சொல்கிறார் கோலி?

i-don-t-want-palayers-to-get-tired-virat-kohli

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க, அணியில் 4 வீரர்கள் இருப்பது நல்ல விஷயம் தான் என்று விராத் கோலி சொன்னார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோது முதல் ஒரு நாள் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டி பற்றி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி கூறும்போது, 
ரஹானே சிறப்பாக விளையாடி வருகிறார். தவான் அணிக்குத் திரும்பி இருப்பதால், ரஹானேவுக்கு வாய்ப்புக் கிடைக்குமா, அல்லது 4 வது வீரராக அவர் களமிறங்குவாரா என்று கேட்கிறார்கள். ஓபனிங்கில் ரஹானே சிறப்பாக விளையாடுகிறார். அவரை மற்ற இடங்களில் இறக்கி, குழப்ப விரும்பவில்லை. அதே போல மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலும் நன்றாக விளையாடுகிறார். ஓபனிங் பேட்ஸ்மேனாக, 4 வீரர்கள் இருப்பது அணிக்கு நல்லதுதான். ஆனால், இரண்டு பேர்  மட்டும்தானே ஆட முடியும். வீரர்கள் யாராவது காயம் அடைந்தாலோ, அல்லது ஃபாரிமில் இல்லாமல் இருந்தாலோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த போட்டி தொடரில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மிடில் ஆர்டரில் ஆடிய அனுபவம் கொண்டவர். அடுத்து தென்னாப்பிரிக்கத் தொடரில் பங்கேற்க இருக்கிறோம். அதனால் வீரர்களை எல்லா போட்டியிலும் ஆட வைத்து சோர்வடைய வைக்க விரும்பவில்லை. இதற்காக ஷமி, உமேஷ் யாதவ் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது’ என்றார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close