[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
விளையாட்டு 26 Jul, 2017 06:26 PM

தவான், புஜாரா அசத்தல் சதம்.. காலே டெஸ்டில் 399 ரன்கள் குவித்த இந்தியா  

dwayne-and-cheteshwar-pujara-scored-centuries-in-the-kallis-test

இலங்கை உடனான முதல் டெஸ்ட்டில் முதல் ‌நாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது. தவான், புஜாரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

காலேவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். புஜாராவுடன் இணைந்து வேகமாக ரன்கள் சேர்த்த ஷிகர் தவான் 110 பந்துகளில் சதமடித்தார். 168 பந்துகளில் 190 ரன்கள் குவித்து தவான் ஆட்டமிழந்தார். தவான்- புஜாரா இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 253 ரன்கள் சேர்த்தது. கேப்டன் விராட் கோலி 3 ரன்களில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய புஜாராவும் சதமடித்தார். புஜாரா 144 ரன்களுடனும், ரஹானே 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close