[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

கேப்டனாக விராட் கோலி தேர்வு

virat-kohli-appointed-as-indian-team-captain

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒருநாள் மற்றும், டி20 போட்டிகள் ஜனவரி 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்புக்கு இடையில் விராட் கோலி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொடர்களில் விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டாலும் விக்கெட்கீப்பராக மகேந்திர சிங் தோனி தொடர்ந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கான ஒருநாள், டி20 போட்டிகளின் வீரர்கள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது

டி20 போட்டி

விராட் கோலி (கேப்டன்), தோனி (விக்கெட்கீப்பர்), மந்தீப், ராகுல், யுவ்ராஜ் சிங், ரெய்னா, ரிஷ்ப், பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, சஹால், மனிஷ், பும்ரா, புவனேஸ்வர், நெஹ்ரா.

ஒருநாள் போட்டி

விராட் கோலி (கேப்டன்), தோனி (விக்கெட்கீப்பர்), ராகுல், யுவ்ராஜ் சிங், அஸ்வின், ஜடேஜா, பாண்டியா, மிஸ்ரா, ஷிகர் தவான், மனிஷ், கேதர், ரஹானே, பும்ரா, புவனேஸ்வர், உமேஷ் யாதவ்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close