[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஜடேஜா சுழலில் வீழ்ந்த இங்கிலாந்து...சென்னையில் இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்த இந்திய அணி

india-beat-eng-by-an-innings-and-75-runs-in-chennai

இங்கிலாந்து அணிக்கெதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 477 ரன்களும், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்களும் எடுத்தன. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 282 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. முந்தைய நாள் ஸ்கோரான 12 ரன்களுடன் கடைசி நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழல் ஜாலத்தில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் அலெஸ்டர் குக், ஜென்னிங்ஸ், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகிய நான்கு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கீட்டன் ஜென்னிங்ஸ் 54 ரன்கள் எடுத்தார். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி, தற்போது 4-0 என்ற கணக்கில் வென்றது. முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் குவித்த இந்திய வீரர் கருண் நாயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close