[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய அணி முதலாவது இன்னிங்சில் 631 ரன்கள் குவிப்பு

india-allout-for-631

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 631 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 231 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. 4-ஆம் நாளான இன்று 631 ரன்கள் குவித்திருந்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 231 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியில் அதிகப்படியாக விராட் கோலி 235 ரன்களும், முரளி விஜய் 136 ரன்களும், ஜெயந்த் யாதவ் 104 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணி சார்பாக அடில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மொயின் அலி, ஜோ ரூட் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், ஜேக் பால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய விளையாடி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close