[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்

ஆட்சிக் கலைப்பே ஆயுதம் .... மோடியின் அடுத்த ஷாக் !

modi-govt-planning-for-president-rule

நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை ஒருங்கே நடத்துவது என்பது பிரதமர் மோடியின் நீண்ட கால திட்டம். மோடி பதவியேற்றதும் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய அப்போதைய குடியரசுத்தலைவர் பிரனாப் இதனை தனது உரையில் முன்மொழிந்திருந்தார். பாஜக தலைவர் அமித் ஷாவும் தனது செய்தியாளார் சந்திப்பில் இதனை வலியுறுத்தினர். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம் இது குறித்து கூறும் போது, செலவை குறைக்க வழி கிடைக்கும் என்பதால் நல்ல யோசனை என ஏற்றுக் கொண்டது. ஆனால், தேவையான மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கால அவகாசம், அரசியல் சாசன சட்டத்திருத்தம் தேவை என கோரிக்கை வைத்தது. இந்நிலையில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கலை ஒன்றன் பின் ஒன்றாக ஆலோசித்து கண்டறிந்தது மத்திய அரசு

பல்வேறு நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளிடம் ஆலோசித்த போது, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தும் போது, ஒருங்கிணைந்த தேர்தல் நடத்துவது எளிது என்ற யோசனை கூறப்பட்டத்து. ஆனாலும் சில மாநில சட்டப்பேரவைகளின் காலத்தை நீட்டிக்கவும், சுருக்கவும் வேண்டும் என்ற சிக்கலும் எழுந்தது. கிடப்பில் போனது யோசனை.

சில நாட்களுக்கு முன்பு பேசிய தலைமை தேர்தல் ஆணையம் ஓம் பிரகாஷ் ராவத், அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரமால் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது கடினம், மேலும் அது அரசின் வேலை என்றார். அப்பொழுது யோசிக்க ஆரம்பித்தது மத்திய அரசு. சட்டத்திருத்தம் செய்யாமல் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை எப்படி சாத்தியப்படுத்தலாம் என யோசித்தது.

குடியரசுத்தலைவர் ஆட்சி என்னும் ஆயுதம் தற்போது பிரம்மாஸ்திரமாக மத்திய அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் , சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் ஆயுட்காலம் வரும் டிசம்பரோடு முடிகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுவதற்கு பதில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். அதே போல் மகராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 2019 இறுதி வரை ஆட்சிக் காலம் இருக்கிறது. இந்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சியை முன்கூட்டியே முடித்து விடுவது.

தற்போதைய சூழலில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியே நடப்பதால் , குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது , சட்டமன்றத்தின் ஆயுள்காலத்தை முன்கூட்டியே முடிப்பது போன்றவற்றை செய்வதில் சிக்கல் இருக்காது. 2019 – ஏப்ரல்-மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் போது, சட்டமன்ற தேர்தலையும் இணைத்து நடத்திட முடியும். தமிழகத்திலும் ஆட்சிக் கவிழ்ப்பை செய்து , குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால் , சிக்கல் இருக்காது.

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிக்கலை , எதிர்ப்பை ஏற்படுத்தும். அதனை சமாளிக்க சில யுக்திகளையும் யோசித்து வருகிறது மத்திய அரசு. என்ன நடந்தாலும், யார் ஆட்சி கவிழ்ந்தாலும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை சாத்தியப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

( Source : தி இகானமிக் டைம்ஸ்)... 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close