[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

இந்த வருஷம் விஜய்-அஜித்- சூர்யா மோதிக் கொள்ளும் அமோகமான தீபாவளி

diwali-2018-box-office-clash-vijay-versus-ajith-versus-suriya

தீபாவளியை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்தான். ஆனால் அந்த வழக்கம் பல வருடங்களாக நடைமுறையில் இல்லாமல் இருந்து வருகிறது. பெரிய நடிகரின் படம் ஒன்று தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுவிட்டால் அடுத்தக் கட்டத்தில் உள்ள நடிகர்கள் தங்கள் படத்தின் ரீலிஸை தள்ளி வைத்துவிடுகிறார்கள். 

அந்தப் போக்கு சமீபகாலமாக அதிகரித்துவிட்டது. இது ஏதோ பெரிய நடிகருக்காக விட்டுக் கொடுக்கும் நல்ல நோக்கத்திற்காக அல்ல. அதிக லாபத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் வியபாரம் சிதறுவதை விரும்புவதில்லை. கூடவே பெரிய நடிகர்களுடன் மோதுவதால் நமது பப்ளிசிட்டி பாதிக்கப்படுமோ என நினைக்கும் பல ஹீரோக்கள் கொஞ்சம் தள்ளியே நின்று விடுகிறார்கள். மேலும் ‘நானும் அவரது ரசிகர்தான். அவரது படத்தை முதல் நாள் முதல் ஷோவில் நானும் போய் பார்ப்பேன்’ என வசனம் பேசி மழுப்பிவிடுகிறார்கள். 

அவர்களுக்கும் நம்ம படம் தீபாவளி திருநாள் அப்போது தியேட்டரை அடைய வேண்டும். அதிக ரசிகர்களின் கொண்டாட்டத்தில் குளிக்க வேண்டும் என ஆசை இல்லாமலா இருக்கும்? ‘தல’ கூட்டத்தோடு போய் மோதி தலையெழுத்தே மாறிப்போய்விட்டால்? ‘தளபதி’ படத்துடன் களத்தில் குதிக்கப் போய் காணாமல் போய்விட்டால்? இந்த அச்சம்தான் அவர்களை மெளனமாக விடை கொடுத்து, வீட்டிற்குள் உட்கார்ந்து புழுங்க வைக்கிறது.

ஒருவிதத்தில் சொல்லப்போனால் இந்தப் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் முன்கூட்டியே தேதியை அறிவித்துவிட்டு வருவதில்லை. இறுதியாக ஒரு முடிவை எடுத்து முன்பே அறிவித்திருந்த சின்ன நடிகரை கடைசி நேரத்தில் நடுங்க வைத்துவிடுகிறார்கள். தமிழ் சினிமாவில் பெரிய நடிகர் அதைவிட்டால் சின்ன நடிகர் தான் தகுதிக்கான பட்டியல். இடையில் இருக்கின்றவர்கள் என்று யாரும் கிடையாது. அதாவது இரண்டாம் கட்ட நடிகர்களென குறிக்கப்படும் நடிகர்கள் கூட சின்ன நடிகர்கள் அளவில்தான் சினிமா வியபார ரீதியாக எடுத்து கொள்ளப்படுகிரார்கள்.

சமீப காலத்தில் சின்ன நடிகராக இருந்து இடைப்பட்ட நடிகர் என்ற இடத்தை தொடாமலே முன் வரிசைக்கு வந்து நின்றவர் சிவகார்த்திகேயன் மட்டும்தான். அவருக்கு என்று பெரிய வியபாரத்தை அவர் தக்க வைத்திருக்கிறார். அல்லது திட்டமிட்டு உருவாகி இருக்கிறார். மற்றபடி சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஆர்யா என பலரும் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் முதல் கட்டத்திற்கு இன்னும் வந்து சேரவில்லை. இவர்களும் ரஜினி, அஜித், விஜய் படங்கள் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது என்றால் தங்களின் படங்களை திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். 

இந்தத் தலைமுறைக்கு ரஜினி, கமல் என்பது போட்டியே இல்லை. ஒரு தலைமுறையில் எம்ஜிஆர்- சிவாஜி படங்கள் தீபாவளிக்கு வருகிறது என்றால் திரையரங்கங்கள் விழா கோலமாக இருக்கும். பிறகு அந்தப் போட்டியில் இருந்து சிவாஜி ஒதுங்கினார். அவருக்குப் பல படங்கள் தோல்வியை கொடுத்தன. அந்தக் கால சினிமா பத்திரிகைகள் ‘சிவாஜி படங்கள் ஏன் ஓடுவதில்லை’ என்று வாதம் நடத்தும் அளவுக்கு அவர் நிலைமை பின்தங்கியது. ஆனால் எம்ஜிஆருக்கு அந்த நிலைமை இல்லை. இன்றும் பல திரையரங்கங்கள் அவரது படங்களை, பல கட்ட திரையிடல்களை நடத்தி பணம் சம்பாதிக்கும் ஒரு பண்டமாக பயன்படுத்துகின்றன.

இவர்கள் தலைமுறைக்குப் பின் வந்தவர்கள் ரஜினி-கமல் தான். ‘முரட்டுக் காளை’ போன்ற படங்கள் ஃபெஸ்டிவல் எஃபெட் உடன் எடுக்கப்பட்டன. அதே போல பல கமல் படங்களை சொல்லலாம். இந்தப் போட்டி 90கள் வரை நீடித்தது. ஆனால் அதன் பிறகு ரஜினியின் வெளிச்சம் மங்கத் தொடங்கியது. அவரது பல படங்கள் வசூல் ரீதியாக சாதனை என கணக்கு சொல்லப்பட்டலும் அதில் பல குழறுபடிகள் உள்ளன. கமல் இந்தத் தீபாவளி போட்டி, ரசிகர்கள் போட்டியில் இருந்து எப்போதோ வெளியேறிவிட்டார். அல்லது ரசிகர்கள் அவரை வெளியேற்றி விட்டனர். அதன் பின் வந்தவர்களில் இன்றும் நின்று விளையாடுவது விஜய்-அஜித் தான். வலைதளத்தில் கூட இந்த இருவர்தான் இன்றைக்கு வைரல் கண்டெண்ட். ஆனால் இவர்கள் கூட பல வருடங்களாக தீபாவளி போட்டியில் நிற்பதில்லை. முடிந்தளவுக்கு அவர்களே தள்ளிப் போய்விடுகிறார்கள். 

ஆனால் அந்தப் போக்கை இந்தத் தீபாவளி மாற்றப்போகிறது. பழையபடி தியேட்டர் வாசலில் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள் வந்து குவியப் போகிறார்கள். அதன்படி பார்த்தால் இந்தத் தீபாவளி பல விதங்களில் தித்துக்கும் தீபாவளியாக இருக்கப் போகிறது. விஜய்-ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘விஜய்62’ அல்லது ‘தளபதி62’ எப்படி சொன்னாலும் ஒரே படம்தான். அதனை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டு வேலைகள் போகின்றன. சென்னை, கொல்கத்தா என பல இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நிச்சயம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு திரும்புவான் ‘விஜய்62’ என அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

இந்தப் போட்டியில் இணைந்திருக்கிறது அஜித்தின் ‘விசுவாசம்’. அதன் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் முடிவை தொடவுள்ள நேரத்தில் ஷூட்டிங் டேக் ஆஃப் ஆக இருக்கிறது. ஹைதராபாத்தில் அதன் படப்பிடிப்பை தொடங்கும் முயற்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன. ‘விவேகம்’ படத்தைவிட கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டி போராடி வருகிறது படக்குழு. இந்தப் போட்டியில் இந்த முறை துணிந்து வந்து நிற்கிறார் சூர்யா. செல்வராகவன் இயக்கும் படத்தில் அவர் தற்சமயம் நடித்து வருகிறார். பொதுவாக சினிமா இண்டரஸ்ரியில் செல்வராகவன் என்றாலே டிலே என்ற பார்வை உள்ளது. பாதிப்படத்தை ஷூடிங் ஸ்பார்ட் வந்த பிறகே தீர்மானிப்பார். அங்கே வந்து உட்கார்ந்து கொண்டுதான் காட்சிகளை கனவு கண்டுக் கொண்டிருப்பார் என பலரும் பேசிவிட்டார்கள். அவரும் அதை ஏற்காமல் இல்லை. அதை தன் பாணி என அவர் பெருமையாக எடுத்து கொள்கிறார். 

ஆனால் அவரே இந்த முறை தனது படத்திற்கு டெட் லைன் வைத்து வேலை பார்க்க முன் வந்திருக்கிறார். ‘இந்தத் தீபாவளிக்கு நிச்சயம் ரிலீஸ்’ என டைட்டில் கார்ட் போட்டுவிட்டு களத்தை சந்தித்திருக்கிறார் செல்வா. ஆகவே இந்தத் தீபாவளி அமோகம்தான். அதாவது மிகப் பெரிய இரண்டு நடிகர்கள் திரைக்கு தங்கள் படம் வரும் என கன்ஃபார்ம் செய்திருக்கிறார்கள். ஆகவே அஜித், விஜய் ரசிகரகள் தியேட்டர் வாசலில் நின்று உற்சாக உருமியை வாசிக்கப் போகிறார்கள். ‘தல’, ‘தளபதி’ கூட்டம் தீயாக வேலை செய்ய போகிறது. இதற்கு நடுவில் சூர்யா ரசிகர்களும் புது உற்சாகம் பெறப்போகிறார்கள். அவரது படமும் தீபாவளி பட்டியலில் வந்திருப்பதால் முன்னணி நடிகர்கள் இடத்திற்கு சூர்யா அப் கிரேட் ஆகியிருக்கிறார். 

மேலும் இந்தப் பட்டியலில் இறுதி நேரத்தில் பல நடிகர்கள் உள்ளே புகலாம். அப்படி புதியதாக பல நடிகர்கள் புகுந்தால் இந்த தீபாவளி டென் தெளசண்ட் வாலா தீபாவளியாக சவுண்ட் அதிகமாகக் கூடும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close