[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

ஐஸ் பக்கெட் குளியல் சேலஞ்ச்..... அவசியம்தானா?

ice-bucket-challenge

ஐஸ் பக்கெட் குளியல் சேலஞ் என்பது பலருக்கு பழக்கப்பட்ட தெரிந்த விளையாட்டாகவே இருக்கலாம். தற்போது இது குறித்து பேசப்படுவதற்கு முக்கிய காரணம் ஆன்டோனி செனர்ச்சியா(46). யார் இவர்? இவர்தான் ஐஸ் பக்கெட் சேலஞ்சை அறிமுகப்படுத்திய இருவரில் ஒருவர். ஏஎல்எஸ் எனும் நோயாளிகள் உதவிக்காக இந்த ஐஸ் பக்கெட் குளியல் சேலஞ் அறிமுகப்படுத்தப்பட்டது. நீண்டகாலமாக ஏஎல்எஸ் நோயுடன் போராடிய ஆன்டோனி செனர்ச்சியா நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

எமியோட்ரோபிக் லேட்ரல் ஸ்க்லெரோசிஸ் (amyotrophic lateral sclerosis) எனும் அந்த நோய் தண்டுவடத்தை உணர்விழக்க செய்து, கை கால்களை செயலிழக்க செய்யும் கொடூர நோய். இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோயாளிகளுக்கு உதவி செய்யவும் பீட் ஃப்ரேட்ஸ் எனும் பிரபல பேஸ்பால் வீரர் மற்றும் ஆன்டோனி செனர்ச்சியா ஆகிய இருவரும் இந்த விளையாட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்
கடந்த 2013 ஆண்டு பீட் ஃப்ரேட்ஸ் முதன் முதலாக இந்த விளையாட்டை விளையாடி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார். தற்போதும் கூட குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரிவர்களும் கூட இந்த சவால் விளையாட்டினை செய்து வினோத பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

ஐஸ் பக்கெட் சேலஞ் என்றால் என்ன?

ஐஸ் பக்கட் சேலஞ்ச் என்பது குளிந்த நீர் அடங்கிய பக்கெட்டை தலையில் கவிழ்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேறு ஒருவரை இந்த சேலஞ்சிற்கு அழைக்க வேண்டும். அந்த நபர் சேலஞ்சை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் அவர் 100 டாலர் கொடுக்க வேண்டும். அந்தப் பணம் ஏஎல்எஸ் நோயாளிக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும். பெருந்தன்மையான சிலர் சேலஞ்சையும் செய்து விட்டு நன்கொடையும் கொடுக்கின்றனர்.

யாரெல்லாம் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

ஐஸ் பக்கெட் சேலஞ் ஸ்கார்ட்லாந்தில்தான் பிரபலம் கோடைக்காலங்களிலும், விடுமுறைக்காலங்களிலும் இதனை செய்வது வழக்கம். அங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு பரவியது. இதனை சாமானியர்கள் மட்டுமல்லாமல் ஒபாமா, மார்க் சக்கர் பெர்க், ஜெஸ்டின் பீபர் உள்ளிட்ட பல பிரபலங்கள் செய்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன் நம்ம நாட்டை சேர்ந்த அக்‌ஷய் குமார், சானியாமிர்சா, ஸ்ரேயா கோஷல் என பலரும் இந்த சேலஞ்சை செய்திருக்கிறார்கள்.

ஐஸ் பக்கெட்டின் சேலஞ் இப்போது?

நன்கொடைக்காக ஆரமிக்கப்பட்ட இந்த விளையாட்டு தற்போது பொழுது போக்கு விஷயமாக மாறிவிட்டது. நன்கொடை என்ற விஷயம் முற்றிலுமாக மறைக்கப்பட்டு ஒரு விளையாட்டாக மட்டுமே உலகம் முழுவது பல்வேறு இடங்களில் விளையாடப்படுகிறது. நோக்கம் மாறியது தவறானது என்றும் இதனை கண்டிக்க வேண்டும் என சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அதே போல தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் உலகில் இது போன்ற விளையாட்டு தேவைதானா எனவும் சமூக நல ஆர்வலர்கள் சிலர் கேட்கின்றனர். இந்த சேலஞ்ச் செய்பவர்கள் தங்களது உடல் நலத்தில் கவனம் கொள்ள தவறி விடுதால் உடல் உபாதைகளும், சமயத்தில் உயிரிழப்பும் நேரிடுகிறது. நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று இந்த விளையாட்டு பொழுதுபோக்காக மட்டுமே விளையாடப்படுகிறது. ஒரு விஷயம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதை அந்த வழியில் முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close