[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உட்பட 44 அமைப்புகளுக்கு அழைப்பு
  • BREAKING-NEWS #JUSTIN தமிழக அரசின் அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
  • BREAKING-NEWS ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஜோக்கர் என்பதை திமுகவினர் காட்டிக்கொள்கின்றனர்-ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 முதியவர்கள் மர்ம மரணம்
  • BREAKING-NEWS கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை, அவர்களோடு சேரவே நான் வந்துள்ளேன்: கமல்ஹாசன்

இந்தியாவின் இரும்புப் பெண்மணி  'இந்திரா காந்தி' பிறந்த தினம் இன்று

indira-gandhi-at-100-why-she-still-rules-india

இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த ஆகச் சிறந்த பெண் ஆளுமையான இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று.

1917ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று நேருவுக்கும், கமலாவுக்கும் மகளாய்ப் பிறந்தார் இந்திரா. தன்னைச் சுற்றியிருந்த
குடும்பச் சூழலும், தன் இரத்தத்தில் ஊறிய அரசியலும், சமூகத்தின் மீதிருந்த ஈடுபாடும் அவரை பெரும் ஆளுமையாக வளர்த்தெடுத்தன. இளம் வயதிலேயே, வானரசேனா என்ற அமைப்பை ஏற்படுத்தி அணிவகுப்புகள், போராட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுத்தவர் இந்திரா.

1959, 1960 ஆகிய ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திரா, தன் தந்தை நேருவின் பிரதிநிதியாக மட்டுமே செயல்பட முடிந்தது. நேருவின் மறைவுக்குப் பின், லால்பகதூர் சாஸ்திரியின் தலைமையிலான அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகக் கால் பதித்தார்.

1966 இல் லால்பகதூர் சாஸ்திரி இறந்தவுடன், காமராஜரின் பெரும் முயற்சியால், மொராஜி தேசாயின் எதிர்ப்பையும் மீறி இந்திரா பிரதமராகத் தேந்தெடுக்கப்பட்டார். இந்திய பிரதமர் இருக்கையை அலங்கரித்த முதல் பெண் என்ற பெருமையை தன் வசப்படுத்தினார். 1969 ஆம் ஆண்டு வங்கிகளைத் தேசிய மயமாக்கியது பொருளாதார முன்னேற்றத்துக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இத்திட்டம் வெற்றியடையவே நிலக்கரி, எஃகு, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஜவுளி தொழிற்சாலைகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களையும் தேசிய மயமாக்கினார் இந்திராகாந்தி.

கிழக்கு பாகிஸ்தானிய மக்களுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் மீது போர் அறிவித்தார். போரில் இந்தியா பெற்ற வெற்றியால் 1971 இல் பங்களாதேஷ் உருவானது. இவ்வெற்றி இந்திராவின் வலிமையை உலகறியச் செய்தது. காஷ்மீர் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வகையில் கையெழுத்திடப்பட்ட 'சிம்லா உடன்படிக்கை'க்கு மிக முக்கிய காரணம் இந்திரா காந்தி.

1967 இல், தேசிய அணுசக்தித் திட்டம் தொடங்கியதும், 1974 இல் பொக்ரைன் அணுச் சோதனை நடத்தியதும் உலகத்தின் கண்களை இந்தியாவை நோக்கித் திரும்பச் செய்த நிகழ்வுகள். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்றவைகளும், உணவுப் பாதுகாப்புத் திட்டங்களும் இந்திரா அரசுக்கு, மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தித்தந்தன.

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, 1975 இல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இந்திராகாந்தியை நீக்கியும், ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கக்கூடாது எனவும் அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் ராஜினாமா செய்ய மறுத்த இந்திரா, 1975 ஜூன் 26 ம் தேதி இந்தியாவில் அவசர நிலையை அமல்படுத்தினார். இதனால் நாடு முழுவதும் இந்திராவுக்கு எதிராக கடும் எதிர்ப்பலைகள் உருவாகின. அதன் காரணமாக, 1977 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். ஆனால் 1979 இல் மீண்டும் மக்கள் ஆதரவு பெற்று பிரதமரானார்.

1984 ஜூன் மாதம் ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற பெயரில், பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தால், கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார் இந்திரா. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான தனது சொந்த பாதுகாவலர்கள் இருவராலேயே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

பல துனிச்சலான தனது செயல்பாடுகளால் உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவரும் அவரே, சுதந்திர இந்தியாவில் அவசர நிலையை முதல் முறையாக பிரகடனப்படுத்தியவரும் அவரே என்ற இரு வேறு எல்லைகளையும் இந்திரா தொட்டிருக்கிறார். ஆனாலும் கூட இதுவரை நாட்டை ஆண்ட பிரதமர்களிலேயே ஆகச் சிறந்தவர் என்ற பாராட்டை மக்கள் இவருக்கு அளித்திருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close