[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கருத்து வேறுபாடுகள் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி நடைபெற்று வருகிறது: தம்பிதுரை
 • BREAKING-NEWS ஹாங்காங்கை ஹாட்டோ எனும் கடும் புயல் தாக்கியது
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.05
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
 • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
 • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
 • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
 • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
 • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
 • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சிறப்புக் கட்டுரைகள் 20 Jun, 2017 04:20 PM

சட்டப்பேரவையில் தலைகீழ் மாற்றங்கள்

sudden-changes-in-tamil-nadu-assembly

 

சட்டப்பேரவையில் வெளிநடப்பு, நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு என்பது சாதாரணமாக நிகழக் கூடிய சம்பவம்தான். சட்டப்பேரவையிலோ, அல்லது நாடாளுமன்றத்திலோ வெளிநடப்பிற்கு காரணமாக, எதிர்க்கட்சிகள் சொல்வது எங்களின் நியாயமான கோரிக்கைகளை சபாநாயகர் சரிவர கண்டுகொள்ளவில்லை. பேச அனுமதி மறுக்கப்படுகிறது போன்றவைதான். காலங்காலமாக நடைபெற்று வரும், சட்டபேரவையிலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வதை பார்த்திருப்போம். ஆனால் தலைகீழ் மாற்றமாக தற்போது தமிழத்தில் ஆளுங்கட்சி ஆதரவு எம்எல்ஏ-க்களும் வெளி நடப்புச் செய்கின்றனர். 

சமீபத்தில் வெளியான மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கண்டன குரல்கள் எழும்பின. புதுச்சேரி, கேரளா, மேகலாயா மட்டுமல்லாது பாஜக கூட்டணி ஆளும் கோவாவிலும் கூட மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பேரவையில் எழுப்பினார். மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக பேரவையில் தனித் தீர்மானமும் கொண்டுவந்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே அரசு முடிவெடுக்கும் என கூறினார். எதுவானாலும், மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு செயல்படும் எனவும், தமிழகத்தில் பசுவதை தடுப்பு சட்டம் 40 ஆண்டுகளாக அமலில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லையெனக் கூறி மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாட்டிறைச்சி விவகாரத்தில் பதில் கேட்டால், முதலமைச்சர் ஏதோ ஒரு அறிக்கையை படித்து விட்டு அமர்ந்துவிட்டார் என்றார். எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு என்பது சர்வ சாதாரணம்தான். ஆனால் எதிர்க்கட்சிகளை தொடர்ந்து அதிமுக ஆதரவு கட்சிகளான மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படையும் வெளிநடப்புச் செய்துள்ளன.

கால்நடைகளை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சந்தைப்படுத்துவதற்கும், விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏற்ற வகையில் தடையில்லா சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்ததாக மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த தமிமூன் அன்சாரி எம்எல்ஏ கூறியிருக்கிறார்.

மாமிசங்களை விருப்பி சாப்பிடும் எண்ணற்ற மக்கள் இருக்கக்கூடிய இந்த சமுதாயத்தில் இவர்கள் இதைச் செய்யக் கூடாது. அதைச் செய்யக் கூடாது எனச் சொல்வது மக்களின் உரிமைக்கு எதிரானது. எனவே மாட்டிறைச்சி விவகாரத்தில் தனிச்சட்டம் தேவை எனக்கூறி முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த கருணாஸ் தெரிவித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த தனியரசும் வெளிநடப்பு செய்தார்.

வெளிநடப்பு செய்த அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த மூன்று பேருமே கடந்த 2016-ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலின் போது, அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். இதற்கு முன் பேரவையில் எத்தனையோ அமளி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற நிலைகளிலும் கூட பேரவையிலிருந்து இவர்கள் வெளிநடப்பு செய்ததில்லை. இன்றைய இவர்களின் வெளிநடப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நேற்று நடந்த சம்பவம் அதைக் காட்டிலும் ஆச்சரியமானது.

அதிமுக எம்எல்ஏ-வான தங்க தமிழ்ச்செல்வனே வெளிநடப்பு செய்தார். ஆண்டிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது தொடர்பா பேச சபாநாயகர் அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்ததாக அவர் கூறினார்.

செந்தில்பாலாஜி, பழனியப்பன், முருகன், பாலசுப்பிரமணியம், கென்னடி ஆகிய ஐந்து எம்எல்ஏக்கள் இன்று அவைக்கே வராமல் பெங்களூரு சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்திருக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close